/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலை பள்ளத்தால் தடுமாறி விழுந்த விவசாயி பலி
/
சாலை பள்ளத்தால் தடுமாறி விழுந்த விவசாயி பலி
ADDED : ஜன 20, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: தலைவாசல் அருகே சிறுவாச்சூர் ஊராட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் வினோத்குமார், 28. விவசாயியான இவர், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, தக்காளி எடுத்துக்கொண்டு, தலைவாசல் மார்க்கெட்டில் விற்பதற்கு, 'ஹீரோ' பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.
நாவக்குறிச்சியில் பாலம் கட்டுமான பணி நடக்கும் இடத்தில், மாற்று வழிப்பாதை சாலையில் சென்றார். அங்கு பள்ளம் இருந்ததால், பாலம் கட்டுவதற்கு வைத்திருந்த இரும்பு கம்பி மீது தக்காளி கூடைகள், பைக்குடன் விழுந்தார். இதில் வினோத்குமார், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.