ADDED : ஜூன் 17, 2026 04:17 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்:ஆத்துார்,
தாண்டவராயபுரம், முருவம் மலை அடிவாரத்தை சேர்ந்தவர் வேலு, 51.
விவசாயியான இவர் நேற்று, சகோதரர் முருகேசனுடன் சேர்ந்து, 7 அடி
உயரத்தில் உள்ள பழைய வீட்டின், 'ஹலோ பிரிக்ஸ்' கற்களை, கடப்பாரை
உதவியுடன் தனித்தனியாக எடுக்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது
சுவர் இடிந்து வேலு மீது விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அவரை, மக்கள்
மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்
உயிரிழந்தார். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். வேலுக்கு
மனைவி மாசிலாமணி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
