ADDED : பிப் 04, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த உள்ளுகு-றுக்கை அருகே பாவாடரப்பட்டியை சேர்ந்தவர்
முனியப்பன், 62, விவசாயி; நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, வீட்டின் அருகே-யுள்ள தன் நிலத்திற்கு சென்றார்.
அவரது நிலத்தில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை, அவரை விரட்டி தாக்கியதில், படுகாயமடைந்த அவர்
உயிரிழந்தார். அவருக்கு கோவிந்தம்மாள், 53, என்ற மனைவியும், செல்வி, 35, என்ற மகளும், பசவராஜ், 32, என்ற மகனும்
உள்ளனர். ராயக்-கோட்டை வனத்துறையினர், உயிரிழந்த முனியப்பன் குடும்பத்-திற்கு முதற்கட்டமாக, 50,000
ரூபாய் இழப்பீடாக வழங்கினர். மேலும், 9.50 லட்சம் ரூபாய் விரைவில் வழங்கப்படும் என, வனத்துறையினர்
தெரிவித்தனர்.

