தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விபத்தில் விவசாயி சாவு

விபத்தில் விவசாயி சாவு

விபத்தில் விவசாயி சாவு


ADDED : செப் 14, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தலைவாசல்:தலைவாசல், தென்குமரையை சேர்ந்தவர் முத்துலிங்கம், 70. விவசாயியான இவர், ஆறகளூரில் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு, 'எக்ஸ்.எல்., ெஹவி டியூட்டி' மொபட்டில் ஹெல்மெட் அணியாமல் சென்று கொண்டிருந்தார்.

அவருடன் மனைவி மணியம்மாள், 52, பேத்தி அனாமிகா, 9, சென்றனர். வேதநாயகபுரம் - ஆரத்தி அகரம் பிரிவு சாலையில் சென்றபோது, தலைவாசலில் இருந்து வீரகனுார் நோக்கி வந்த, 'ஸ்விப்ட் டிசையர்' கார், மொபட் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட முத்துலிங்கம், மணியம்மாள், அனாமிகா படுகாயமடைந்தனர். அவர்களை, மக்கள் மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழியில் முத்துலிங்கம் உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

மரம் வெட்டும் தொழிலாளி

ஓமலுார், ஆட்டுக்காரனுாரை சேர்ந்தவர் வேல்முருகன், 55. மரம் வெட்டும் தொழிலாளி. இவர் கடந்த, 6 இரவு, 8:30 மணிக்கு முத்துநாயக்கன்பட்டி - பெருமாள்கோவில் மேடு பகுதியில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயத்துடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேல்முருகன், நேற்று உயிரிழந்தார். அவரது மகன் வெங்கடேஷ் புகார்படி, தொளசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us