தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வேண்டுதலை நிறைவேற்றும் வெள்ளப்பிள்ளையார்

வேண்டுதலை நிறைவேற்றும் வெள்ளப்பிள்ளையார்

வேண்டுதலை நிறைவேற்றும் வெள்ளப்பிள்ளையார்


ADDED : செப் 14, 2026 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார் பஸ் ஸ்டாண்ட் எதிரே, வசிஷ்ட நதி தென்கரையில் வெள்ளப்பிள்ளையார் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாடில் உள்ளது. 400 ஆண்டுக்கு முன், வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, பழமையான விநாயகர் சிலை, தண்ணீரில் அடித்து வந்து கரை ஒதுங்கியது. அச்சிலையை பார்த்த மக்கள், பிரதிஷ்டை செய்து கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.

ஆற்று வெள்ளத்தில் அடித்து வந்த விநாயகருக்கு, 'வெள்ளம் பிள்ளையார்' என வழிபாடு செய்து வந்தனர். அந்த பெயரே மருவி, வெள்ளப்பிள்ளையார் என மாறியது. உப சன்னதிகளாக மகாலிங்கேஸ்வரர், பாலமுருகன், நவகிரகங்கள் உள்ளன. கோவில் ஈசானிய பகுதியான பிரம்ம பாகத்தில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. அங்கு தண்ணீர் வற்றும்போது வறட்சி ஏற்படும் என்பதும், தண்ணீர் நிரம்பும்போது மழை வரும் என்பதும் ஐதீகம்.

20 ஆண்டுக்கு பின்... கடந்த, 2005ல், இக்கோவில் கும்பாபி ேஷகம் நடந்தது. 20 ஆண்டுக்கு பின், 2025 நவ., 15ல் கும்பாபி ேஷகம் நடந்தது. புதிதாக மகா மண்டபம், கிழக்கு பகுதியில், 3 நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோபுரத்தில், 10 அடி உயரத்தில், அமர்ந்த நிலையில் விநாயகர்; தெற்கு ராஜகோபுரத்தில், 10 அடி உயரத்தில் விஸ்வரூப விநாயகர்; வடக்கு பகுதியில் சால ராஜ கோபுரம் உள்ளன. ஆத்துாரில், 3 ராஜகோபுரம் உள்ள கோவிலாக, இது உள்ளது. கருவறை மேற்புறம், 16 அவதாரங்களில், விநாயகர் சிலைகள் உள்ளன. கருவறை முன், விநாயகரின் வாகனமான மூஷிகர், மனைவி, குழந்தையுடன் அருள்பாலிக்கின்றனர்.தற்போது தங்கத்தேர் செல்லும்படி பாதை அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக மண்டபம், அன்னதான கூடம் கட்டப்பட்டுள்ளன. அரச மரத்தில் இருந்த மகாலிங்கேஸ்வரருக்கு புதிதாக சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

வளர்பிறை சதுர்த்தி, தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி மற்றும் மஹா சங்கடஹர சதுர்த்தி நாளில், வெள்ளி, புஷ்ப அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலிக்கிறார். விநாயகர் சதுர்த்தி நாளில் வெள்ளி கவசம், வெண்ணெய், சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பது விசேஷம். அதன்படி சதுர்த்தி நாளான இன்று, புதிதாக தங்க கவசம் சாத்தப்படுகிறது.

மணப்பெண்ணுக்கு தாய் வீட்டு பிள்ளையார்

வெள்ளப்பிள்ளையார் கோவிலின் சிறப்பம்சம், பெண், மாப்பிள்ளை அழைப்பு வைபவம். ஆத்துாரில் நடக்கும் திருமண நிகழ்ச்சியின்போது, மாப்பிள்ளை வீட்டுக்கு மணப்பெண்ணை அழைத்து வருவதற்கு முன், வெள்ளப்பிள்ளையார் கோவிலுக்கு, மணப்பெண்ணை அழைத்துச்சென்று வழிபடுவர். பின் மாப்பிள்ளை வீட்டினர், இக்கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க அழைத்துச்சென்று, திருமணம் செய்வதால் புதுமணப்பெண்ணுக்கு, 'தாய் வீடு' போன்று உள்ளது. இங்கிருந்து மணப்பெண்ணை அழைத்துச்சென்றால் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார் என்பது நம்பிக்கை. மேலும் திருமணத்தடை நீங்க, கருவறை வெளியே உள்ள கல்யாண விநாயகருக்கு தேங்காய், வெற்றிலை மாலை அணிந்து வழிபடுகின்றனர். அத்தடை நீங்கி, புதுமண தம்பதிகளாக வந்து வழிபட்டு, குடும்ப வாழ்க்கையை தொடர்கின்றனர். அத்துடன் குழந்தை பாக்கியம் பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும், விநாயகரை வழிபடுகின்றனர். இதனால் வேண்டுதலை நிறைவேற்றும் விநாயகராக அருள்பாலித்து வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us