/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிராக்டர் டயர் வெடித்து விவசாயி பலி; நண்பர் படுகாயம்
/
டிராக்டர் டயர் வெடித்து விவசாயி பலி; நண்பர் படுகாயம்
டிராக்டர் டயர் வெடித்து விவசாயி பலி; நண்பர் படுகாயம்
டிராக்டர் டயர் வெடித்து விவசாயி பலி; நண்பர் படுகாயம்
ADDED : செப் 21, 2024 06:43 AM
ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கல்பகனுார், ராமமூர்த்தி நகரை சேர்ந்த விவசாயி தியாகராஜன், 42. இவரது நிலத்தில் பயிர் சாகுபடிக்கு அதே பகுதியில் ஆடு, மாடு கழிவின் மட்கிய எருவை, டிராக்டரில் அள்ளி நேற்று ஓட்டிச்சென்றார். அப்போது அவரது நண்பர் ராதாகிருஷ்ணனும், டிராக்டரில் வந்தார்.
மாலை, 5:30 மணிக்கு சாலை வளைவில் சென்றபோது முன்புற டயர் வெடித்து டிராக்டரில் இருந்த இருவரும் துாக்கி வீசப்பட்-டனர். தியாகராஜன் பின்புற டயரில் சிக்கி சம்பவ இடத்தில் உயி-ரிழந்தார். ராதாகிருஷ்ணன் படுகாயம் அடைந்து ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.