ADDED : டிச 26, 2024 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி, நடு தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை, 69. விவசாயியான இவர், நேற்று இரவு, 7:00 மணிக்கு தேவியாக்குறிச்சி பஸ் ஸ்டாப்பில் இருந்து, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்-போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அண்ணாமலை துாக்கி வீசப்பட்டார்.
படுகாயமடைந்த அவரை, மக்கள் மீட்டு ஆத்துார் அரசு மருத்துவ-மனையில் சேர்த்தனர். ஆனால் அவர் உயிரிழந்தது தெரிந்தது. தலைவாசல் போலீசார், விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.

