sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

5 லட்ச ரூபாய் கடனுக்கு 9.27 லட்சத்தை இழந்த விவசாயி

/

5 லட்ச ரூபாய் கடனுக்கு 9.27 லட்சத்தை இழந்த விவசாயி

5 லட்ச ரூபாய் கடனுக்கு 9.27 லட்சத்தை இழந்த விவசாயி

5 லட்ச ரூபாய் கடனுக்கு 9.27 லட்சத்தை இழந்த விவசாயி


ADDED : ஜன 21, 2025 06:07 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ஐந்து லட்சம் கடனுக்காக, 9.27 லட்சம் ரூபாயை விவசாயி இழந்-துள்ளார்.பனமரத்துப்பட்டி அருகே தும்பல்பட்டியை சேர்ந்தவர் முருகன், 30, விவசாயி. இவரது மொபைல் எண்ணுக்கு கடந்த, 2024 அக்-டோபரில் கடன் பெறுவது தொடர்பாக எஸ்.எம்.எஸ்., வந்தது. அதில் பிரபல தனியார் நிதி நிறுவனத்தில், 1 சதவீத வட்டிக்கு, 5 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும் என கூறப்பட்டு இருந்து.

இந்த கடன் தொகையை பெற முருகன், எஸ்.எம்.எஸ்., வந்த நம்-பரை தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து, மறுமு-னையில் பேசிய மர்ம நபர், கடன் தொகையை பெற செயலாக்க கட்டணம், ஆவண கட்டணம்,

காப்பீட்டு கட்டணத்திற்காக குறிப்-பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என கூறினார்.இதையடுத்து முருகன் மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு, முதலில் குறிப்பிட்ட தொகையை அனுப்பினார். பின் முருக-னிடம் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி முருகன் கடன்

பெற்று கடந்த அக்.,22 முதல் நவ.,27 வரை, 44 பரிவார்த்தனைகளில், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த, எட்டு வங்கி கணக்கில், 9.27 லட்-சத்தை மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு செலுத்தினார்.இதை தொடர்ந்து, அந்த மர்ம நபர் கடன் தொகையை வழங்க-வில்லை, வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லை. இதன்பின், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து, சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் முருகன் புகார்

அளித்தார்.






      Dinamalar
      Follow us