sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் தராமல் அலைக்கழிப்பு; அடுத்தடுத்து விவசாயிகள் குற்றச்சாட்டு

/

கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் தராமல் அலைக்கழிப்பு; அடுத்தடுத்து விவசாயிகள் குற்றச்சாட்டு

கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் தராமல் அலைக்கழிப்பு; அடுத்தடுத்து விவசாயிகள் குற்றச்சாட்டு

கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் தராமல் அலைக்கழிப்பு; அடுத்தடுத்து விவசாயிகள் குற்றச்சாட்டு


UPDATED : டிச 20, 2025 01:05 PM

ADDED : டிச 20, 2025 07:04 AM

Google News

UPDATED : டிச 20, 2025 01:05 PM ADDED : டிச 20, 2025 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று, நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் விவசாயிகள் பேசியதாவது:

நல்லதம்பி: கொட்டவாடியில் உள்ள, பேளூர் - கரடிப்பட்டி கூட்-டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் தராமல், 4 மாதங்களாக அலைக்கழிக்கின்றனர். புது உறுப்பினர்களுக்கு கடன் கிடையாது என கூறுகின்றனர்.

தொடர்ந்து பழனிமுத்து, நடராஜ், கோவிந்தன் உள்ளிட்ட நிறைய விவசாயிகள், கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் தராமல் போக்-குகாட்டுவதாக சரமாரியாக குற்றம்சாட்டி பேசினர். இதனால் சல-சலப்பு உண்டானது. பின் அனைவரையும் சமாதானப்படுத்திய கலெக்டர் பிருந்தாதேவி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனால் விவசாயிகள் அமைதி அடைந்தனர்.

பெரியண்ணன்: ஊனத்துார் ஊராட்சியில், 2 மாதங்களுக்கு முன் நடந்த சமூக தணிக்கையில், 2022 - 24 வரை, 100 நாள் வேலை திட்டத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இதில் நடவடிக்கை இல்லாததால், சிறப்பு தணிக்கை நடத்தி, ஊழலை வெளிக்கொண்டு வந்து, கையாடல் செய்தவர்களை தண்டிக்க வேண்டும்.

கோவிந்தன்: கருமந்துறையில் வாடகை கட்டடத்தில் இயங்கும் வேளாண் உதவி அலுவலகத்துக்கு சொந்த கட்டடம் கட்ட பல-முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்-றனர். விவசாயிகள் சொந்த நிலத்தில் உலர்களம் அமைக்க, மானி-யத்துடன் கடனுதவி வழங்க வேண்டும்.

ராஜகோபால்: உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நாவக்குறிச்சியில், 8 ஏக்கர் நீர்வழித்-தட ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. அதேபோல் நாவக்குறிச்சி ஏரி ஆக்கிரமிப்பை, ஒன்றிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பொதுப்பணிக்கு சொந்தமான புத்துார் ஏரியும் ஆக்கிரமிப்பில் உள்ளது.

பால தண்டாயுதபாணி: புதுமாவாறு ஊராட்சியில் மலைவாழ் மக்-களுக்கான வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்வதால், உடனே தடுக்க வேண்டும்.ராமச்சந்திரன்: மண்மலை ஊராட்சியில் சாலைகளை பயன்படுத்த முடியாதபடி குண்டும், குழியுமாக உள்ளது. பழுதான குடிநீர் மோட்டாரை எடுத்துச்சென்று, 2 ஆண்டாகியும் திரும்ப பொருத்-தாததால், 2 கி.மீ.,ல் உள்ள பெருமாள் கோவில் பாலி பகுதியில் தண்ணீர் எடுக்க செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு அவர்கள் பேசினர்.






      Dinamalar
      Follow us