/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அசோஸ்பைரில்லம் பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை
/
அசோஸ்பைரில்லம் பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை
ADDED : பிப் 07, 2025 04:17 AM
பனமரத்துப்பட்டி: காற்றில் இருக்கும் தழைச்சத்தை, அசோஸ்பைரில்லம் நிலை நிறுத்தி, பயிர் வளர்ச்சிக்கு தேவைப்படும் வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்கிறது. இதை விவசாயிகள் பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத் கூறியதாவது:அசோஸ்பைரில்லம் என்பது தழைச்-சத்தை நிலைநிறுத்தும் திறன் பெற்ற பாக்டீரிய வகையை சார்ந்த ஒரு நுண்ணுயிர். இவை மண்ணில் இருப்பதை விட வேர் பகு-தியில் அதிகளவு காணப்படுகின்றன. இது, காற்றில் இருக்கும் தழைச்சத்தை நிலை நிறுத்துவதோடு, பயிர் வளர்ச்சிக்கு தேவைப்-படும் வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்கிறது. இதனால் பயிர்-களின் வேர்களும், தண்டு பாகமும், இலைகளும், வேகமாக வளர்ந்து பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.வேர் வளர்ச்-சியை துாண்டுவதால், நீரையும் ஊட்டச்சத்துகளையும் உறிஞ்சும் தன்மை அதிகரித்து பயிருக்கு வறட்சியை தாங்கும் தன்மையை அளிக்கிறது. இலைகளில் பச்சையத்தை அதிகப்படுத்தி அதிக ஒளிச்சேர்க்கை நடைபெற ஏதுவாகிறது. இதனால் பயிரின் மகசூல் அதிகரிக்கிறது. மண் வளத்தை மேம்படுத்தி, மற்ற உயிர் உரங்களுடன் இணைந்து செயல்படும் தன்மை கொண்டது.நெல், மக்காச்சோளம், சிறுதானிய பயிர்கள், பருத்தி, எள், சூரிய-காந்தி, மல்பெரி, காய்கறி, அனைத்து வகை தோட்டக்கலை பயிர்கள், மரக்கன்றுகளுக்கு அசோஸ்பைரில்லத்தை பயன்படுத்-தலாம். தேவைப்படும் விவசாயிகள், பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

