sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

2 லட்சம் மூட்டை ஜவ்வரிசி தேக்கம் விலை குறைவால் விவசாயிகள், வியாபாரிகளுக்கு பாதிப்பு

/

2 லட்சம் மூட்டை ஜவ்வரிசி தேக்கம் விலை குறைவால் விவசாயிகள், வியாபாரிகளுக்கு பாதிப்பு

2 லட்சம் மூட்டை ஜவ்வரிசி தேக்கம் விலை குறைவால் விவசாயிகள், வியாபாரிகளுக்கு பாதிப்பு

2 லட்சம் மூட்டை ஜவ்வரிசி தேக்கம் விலை குறைவால் விவசாயிகள், வியாபாரிகளுக்கு பாதிப்பு


ADDED : டிச 08, 2024 03:56 AM

Google News

ADDED : டிச 08, 2024 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ஜவ்வரிசி விலை வீழ்ச்சியால் 2 லட்சம் மூட்டை ஜவ்வரிசி தேக்கம் அடைந்துள்ளன. விலை குறைவால், விவசாயிகள், உற்-பத்தியாளர்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம், குரங்குச்சாவடியில் உள்ள சேகோசர்வ் சங்கத்தில், பல்-வேறு மாவட்டங்களை சேர்ந்த, 350க்கும் மேற்பட்டோர் உறுப்பி-னர்களாக உள்ளனர். இங்கிருந்து மத்திய பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநி-லங்களுக்கு ஜவ்வரிசி கொண்டு செல்லப்படுகிறது. அங்கு பண்-டிகை காலம் முடிந்ததால் தற்போது ஜவ்வரிசி தேவை குறைந்து, விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சேகோ - ஸ்டார்ச் நலச்சங்க மாநில பொருளாளர் சிவக்குமார் கூறியதாவது:

சேலம் உள்பட, 6 மாவட்டங்களில், 100 சேகோ ஆலைகள், 50 ஸ்டார்ச் ஆலைகள் செயல்படுகின்றன. சேகோ ஆலைகளில் தினமும் சராசரியாக, 15 டன் முதல், 30 டன் ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. ஸ்டார்ச் ஆலைகளில், 10 முதல், 15 டன் உற்-பத்தியாகிறது. ஆனால் விலை, விற்பனை குறைவால், ஆலை-களில், 1 லட்சம், சேகோசர்வில், 1 லட்சம் என, 2 லட்சம் ஜவ்வ-ரிசி மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. ஸ்டார்ச், 20,000 மூட்-டைகள் தேக்கமடைந்துள்ளன.

கடந்த நவம்பர் இறுதியில் இருந்து மரவள்ளிக்கிழங்கு அறுவடை தொடங்கியதால், 75 சதவீத ஜவ்வரிசி ஆலைகளில், உற்பத்தி நடக்கிறது. ஸ்டார்ச் ஆலைகளில் கடந்த, 15 நாட்களாக உற்பத்தி இல்லை. வெயில் அடிக்கும்போது ஸ்டார்ச் உற்பத்தி தொடங்கும்.

ஜவ்வரிசி உற்பத்தி, தமிழகத்தில் அதிகம். ஆனால் வடமாநிலங்க-ளுக்கு அதிகம் விற்கப்படுகிறது. தமிழகத்தில் ஜவ்வரிசி பயன்-பாட்டை அதிகப்படுத்த வேண்டும். அதற்கு காலை உணவு திட்-டத்தில், ஊட்டச்சத்து பொருளான ஜவ்வரிசி கிச்சடி, மாணவ, மாணவியருக்கு வழங்கலாம். இதை பின்பற்றி பிற மாநிலங்க-ளிலும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது. அதேபோல் ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி விற்க வேண்டும். அப்-போது தேவை அதிகரித்து விலை சீராக இருப்பதோடு, தொழில் வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர கடந்த காலத்தில் சேகோசர்வ் மூலம் தான் ஜவ்வரிசி விற்-பனை நடந்தது. தற்போது, 30 சதவீதம் சேகோசர்வ், மீதி, 70 சத-வீதம், வெளி மார்க்கெட் மூலமும் விற்பனை நடக்கிறது. இதனால் ஒவ்வொரு ஆலைகளில் ஒரு விலை நிர்ணயிப்பதால், விலை குறைகிறது. இதை தவிர்க்க, 5 சதவீத ஜி.எஸ்.டி.,யில், 2.5 சதவீதம் மாநில வரிக்கு, அரசு விலக்கு அளிக்க வேண்டும். இப்படி செய்தால் வெளிமார்க்கெட் விற்பனை குறைந்து, விலை சீராக இருக்கும்.

கடந்த ஆகஸ்டில் சேகோ மூட்டை(90 கிலோ), 4,500 முதல், 4,800 ரூபாய் வரை விற்றது. பின் படிப்படியாக குறைந்து, தற்-போது, 3,400 முதல், 3,500 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஸ்டார்ச் மூட்டை, 3,400 முதல், 3,500க்கு விற்றது, தற்போது, 2,400 முதல், 2,800 ரூபாய் வரை விற்பனையாகிறது. பண்டிகை-யின்போது தினமும், 10,000 முதல், 15,000 ஜவ்வரிசி மூட்-டைகள் விற்றன. தற்போது, 5,000 மூட்டைகளே விற்கின்றன. 50 சதவீதத்துக்கு மேல் விற்பனை குறைந்துள்ளது. விலை குறைவால், விவசாயிகள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவராத்திரியின்போது வடமாநிலங்களில் ஜவ்வரிசி தேவை அதிகம் இருக்கும். அப்போது விலை உயர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us