/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காவிரியில் பெருக்கெடுத்த நீர் விவசாயிகள் மகிழ்ச்சி
/
காவிரியில் பெருக்கெடுத்த நீர் விவசாயிகள் மகிழ்ச்சி
காவிரியில் பெருக்கெடுத்த நீர் விவசாயிகள் மகிழ்ச்சி
காவிரியில் பெருக்கெடுத்த நீர் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மார் 15, 2024 01:40 AM
மேட்டூர்:காவிரி கரையோர மாவட்டங்கள், பெங்களூரு, மாதேஸ்வரன் மலை உள்ளிட்ட நகரங்களின் குடிநீர் தேவைக்கு, கடந்த, 12ல், கர்நாடகா மாநிலம் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து வினாடிக்கு, 2,760 கனஅடி நீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது.
அந்த நீரின் ஒரு பகுதி நேற்று காலை, தமிழகம் - கர்நாடகா எல்லையில் உள்ள பாலாறு வனப்பகுதியை அடைந்து, மேட்டூர் அணையை நோக்கி சென்றது. இதனால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 67 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று வினாடிக்கு, 148 கனஅடியாக அதிகரித்தது.
தமிழக எல்லையில் மழையின்றி வறண்ட காவிரியாற்றில், நேற்று தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது, கால்நடைகளை மேய்க்கும் விவசாயிகள், மீனவர்கள், கரையோர கிராம மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.