/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நேரடி கொள்முதல் செய்யாததால் செங்கரும்பு விற்க முடியாமல் கொந்தளித்த விவசாயிகள்
/
நேரடி கொள்முதல் செய்யாததால் செங்கரும்பு விற்க முடியாமல் கொந்தளித்த விவசாயிகள்
நேரடி கொள்முதல் செய்யாததால் செங்கரும்பு விற்க முடியாமல் கொந்தளித்த விவசாயிகள்
நேரடி கொள்முதல் செய்யாததால் செங்கரும்பு விற்க முடியாமல் கொந்தளித்த விவசாயிகள்
ADDED : ஜன 09, 2024 10:28 AM
இடைப்பாடி: பூலாம்பட்டி பகுதியில் விளைவிக்கப்பட்டுள்ள கரும்புகளை, விற்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
பொங்கல் விழாவிற்கு, பல ஆண்டுகளாக ரேஷன் கார்டுக்கு இரண்டு அடி கரும்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், சில ஆண்டுகளாக முழு கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட, 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்க சேலம் மாவட்டம், பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனுார், சிலுவம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில், 600க்கும் மேற்பட்ட ஏக்கரில் செங்கரும்பை விவசாயிகள் விளைவித்துள்ளனர்.
பூலாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகள் பதிவு செய்து வைத்துள்ளனர். ஒவ்வொரு விவசாயிடம் தலா, 5,000 முழு கரும்புகளை பெற்று கொள்கிறோம் எனக்கூறிய அதிகாரிகள் தற்போது, 1,000 கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என கூறியதால், நேற்று 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பூலாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டனர்.
இது குறித்து பூலாம்பட்டி, கூடக்கல், களர்பட்டி விவசாயிகள் கூறியதாவது: வெளிமாவட்டங்களில் இருந்து வந்த அதிகாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யாமல் புரோக்கர்களிடம் தரமற்ற, 3 அடி, 4 அடி கரும்புகளை வாங்கி சென்றுள்ளனர். கூட்டுறவு சங்கத்தில், 1,000 கரும்புகளை மட்டுமே வாங்குகின்றனர். மீதி கரும்புகளை நாங்கள் எங்கே விற்பது. கூட்டுறவு சங்கத்தில், 20 நாட்களுக்கு முன்பே பதிவு செய்து வைத்திருந்தோம். முதலில் 5,000 கரும்பு வாங்குகிறோம் எனக்கூறி விட்டு, தற்போது, 1,000 போதும் என்கின்றனர். எங்களுக்கு லாபம் வேண்டாம், போட்ட முதலீடாவது வேண்டும். விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு கூறினர்.