sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அரளி மகசூல் சரிவால் விவசாயிகள் கவலை

/

அரளி மகசூல் சரிவால் விவசாயிகள் கவலை

அரளி மகசூல் சரிவால் விவசாயிகள் கவலை

அரளி மகசூல் சரிவால் விவசாயிகள் கவலை


ADDED : நவ 20, 2024 07:36 AM

Google News

ADDED : நவ 20, 2024 07:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 800 ஏக்கரில் அரளி நடவு செய்யப்பட்டுள்ளது. தினமும் அதிகாலை, செடியில் இருந்து அரளி மொக்கு அறுவடை செய்து, 1 கிலோ வீதம் பாக்கெட்டில் அடைத்து தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இதுகுறித்து அரளி விவசாயிகள் கூறியதாவது: அரளி வியாபாரத்தை நம்பி, 15,000 குடும்பத்தினர் உள்ளனர். சில நாட்களாக, தொடர் மழை பெய்ததால் செடியில் இருந்த சிறு அரும்புகள் உதிர்ந்துவிட்டன. பனிப்பொழிவு, குளிர் காற்று வீசுவதால் புது அரும்புகள் செடிகளில் உற்பத்தியாகவில்லை. இதனால், 10 கிலோ கிடைத்த வயலில், 2 கிலோ மட்டும் கிடைக்கிறது. ஐயப்பன் கோவில் சீசன் நேரம் என்பதால் அரளி தேவை உள்ளது. ஆனால் பருவ நிலை மாற்றத்தால் அரளி விளைச்சல் குறைந்ததால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us