/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குப்பை கொட்ட எதிர்ப்பு; 10ம் முறை விவசாயிகள் கைது
/
குப்பை கொட்ட எதிர்ப்பு; 10ம் முறை விவசாயிகள் கைது
ADDED : பிப் 19, 2025 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: இடைப்பாடி அருகே அரசிராமணி டவுன் பஞ்சாயத்தில் சேகரமாகும் குப்பையை கொட்ட, குறுக்குப்பாறையூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கு குப்பை கொட்டப்பட்டு வரும் நிலையில், அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து ஒன்றரை மாதமாக போராடி வருகின்றனர்.
நேற்று மா.கம்யூ., விவசாய சங்க மாநில செயலர் பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 31 பேரையும் கைது செய்தனர். பின் வழக்கம்போல் மாலையில் விடுவித்தனர். இதுபோன்று, 10ம் முறை கைது செய்து விடுவிக்கப்பட்டனர்.