/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குண்டுமல்லி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
குண்டுமல்லி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஆக 22, 2025 01:26 AM
எருமப்பட்டி ஆவணி மாத வெள்ளிக்கிழமை அமாவாசையையொட்டி, நேற்று குண்டுமல்லி விலை உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், போடிநாய்க்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், குண்டு மல்லி பூக்கள் பயிரிட்டுள்ளனர். விவசாயிகள் அதிகாலை நேரத்தில் பூக்களை பறித்து நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உள்ள பூ மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். கடந்த பங்குனி முதல், அதிக வெயில் காரணமாக குண்டு மல்லிகை பூக்கள் வரத்து அதிகரித்திருந்தது. இதனால், விசேஷ நட்களை தவிர மற்ற நாட்களில் குண்டு மல்லிகை பூக்கள் வரத்து அதிகம் காரணமாக கிலோ, 200 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந் நிலையில், ஆவணி மாதம் பிறந்துள்ளதையொட்டி, குண்டு மல்லி விலை உயர்ந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக குண்டுமல்லி கிலோ, 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அமாவாசையையொட்டி, விலை அதிகரித்து கிலோ, 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.