/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இனி வியாழன்தோறும் மஞ்சள் ஏலம் வாழப்பாடி விவசாயிகளுக்கு அழைப்பு
/
இனி வியாழன்தோறும் மஞ்சள் ஏலம் வாழப்பாடி விவசாயிகளுக்கு அழைப்பு
இனி வியாழன்தோறும் மஞ்சள் ஏலம் வாழப்பாடி விவசாயிகளுக்கு அழைப்பு
இனி வியாழன்தோறும் மஞ்சள் ஏலம் வாழப்பாடி விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஏப் 07, 2025 04:30 AM
வாழப்பாடி: இனி வாழப்பாடியில் வியாழன்தோறும் மஞ்சள் ஏலம் தொடங்கப்பட உள்ளதால், விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்கா-ணிப்பாளர் பிரகாஷ்குமர்(பொ) அறிக்கை: வாழப்பாடி, அதை சுற்-றிய பகுதிகளில் ஆண்டுதோறும், 1,000 ஹெக்டேரில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மஞ்-சளை, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு எடுத்துச்-சென்று விற்கின்றனர். விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவு, காலவிரயம் ஏற்படுவதை தவிர்க்க, வாழப்பாடியில் ஏலம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும், 10 முதல், வியாழன்தோறும் ஏலம் நடக்கும் என்பதால், வாழப்பாடி வட்-டார விவசாயிகள், மஞ்சளை அறுவடை செய்து பதப்படுத்தப்-பட்ட மஞ்சளை தரம் பிரித்து, மங்கம்மா சாலையிலுள்ள, வாழப்-பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்து மறை-முக ஏலத்தில் விற்று பயன் பெறலாம். வியாபாரிகளால் கொள்-முதல் செய்யப்பட்ட விலை, எந்த பிடித்தமும் இல்லாமல் உடனே வழங்கப்படும். விபரங்களுக்கு, 97502 72977, 6379520861 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

