/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'சங்ககிரியில் உழவர் சந்தையை விரைவாக தொடங்க வேண்டும்'
/
'சங்ககிரியில் உழவர் சந்தையை விரைவாக தொடங்க வேண்டும்'
'சங்ககிரியில் உழவர் சந்தையை விரைவாக தொடங்க வேண்டும்'
'சங்ககிரியில் உழவர் சந்தையை விரைவாக தொடங்க வேண்டும்'
ADDED : டிச 26, 2025 04:55 AM
சங்ககிரி: சங்ககிரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. ஆர்.டி.ஓ., கேந்திரியா தலைமை வகித்தார். அதில் விவசாயிகள் பேசியதாவது:
தமிழக விவசாயிகள் சங்க, சங்ககிரி தாலுகா தலைவர் ராஜேந்-திரன்: சங்ககிரியில் உழவர் சந்தையை விரைவில் தொடங்க வேண்டும். தேவூர் சரபங்கா ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை, அப்பகுதியில் அறுவடை முடிந்ததும் விரைவாக அளவீடு செய்து அகற்ற வேண்டும்.தேவண்ணக்கவுண்டனுார் சத்யராஜ்: கூட்டுறவு கடன் சங்கங்-களில் விவசாயிகளுக்கு அரசு அறிவித்த, 2 லட்சம் ரூபாய் கடனை வழங்காமல், 1.40 லட்சம் ரூபாய் மட்டும் வழங்கப்படு-கிறது. மேலும் உரங்கள் கிடைக்காமல் சிரமத்துக்கு ஆளா-கிறோம்.
வெள்ளகவுண்டம்பாளையம் செல்லப்பன்: வெள்ளகவுண்டம்பா-ளையம் ஏரிக்கு
சரபங்கா நதி உபரிநீர் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
சாமியம்பாளையம் சக்திவேலு: கத்தேரியில் இருந்து தேவூர் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிக-ளுக்கு, ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார். சங்ககிரி, இடைப்பாடி தாலு-காவில் உள்ள அரசு அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.

