ADDED : டிச 26, 2025 04:54 AM

ஏற்காடு: ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்-கின்றனர். தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறை நாளான நேற்று, வழக்கத்தை விட, ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்தனர். அவர்கள் அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டம், லேடீஸ், ஜென்ஸ் சீட்டுகள், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் உள்ளிட்ட இடங்களை கண்டுகளித்தனர்.
மேலும் படகு இல்லத்தில் காலை முதல் ஏராளமானோர், படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அங்கு அதிக அளவில் கூட்டம் இருந்ததால், பயண சீட்டை வாங்கி கொண்டு வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர். மேட்டூர் அணை
அதேபோல் மேட்டூர் அணை பூங்காவை, 3,526 சுற்றுலா பயணியர் பார்வையிட்டனர். இதனால் நுழைவு கட்டணம், மொபைல், கேமரா, பவள விழா கோபுரத்துக்கு நுழைவுச்சீட்டு என, 59,510 ரூபாய், நீர்வளத்துறைக்கு வசூலானது.

