/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்க வேண்டும்விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்
/
கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்க வேண்டும்விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்
கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்க வேண்டும்விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்
கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்க வேண்டும்விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்
ADDED : மே 02, 2025 02:33 AM
காங்கேயம்:மத்திய அரசு கரும்புக்கு ஆதார விலை, ரூ.355ஆக அதிகரித்துள்ளது, தமிழக விவசாயிகளுக்கு கிடைக்காது என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அதன் நிறுவனர் ஈசன்முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு அக்டோபரில் தொடங்கவிருக்கும், 2025-26ம் ஆண்டுக்கான கரும்பு அரவை பருவத்திற்கு, கரும்புக்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு, 4.41 சதவீதமாக உயர்த்தி, ரூ.355 அதிகரித்து நிர்ணயித்துள்ளது. இதற்கு குறைந்தபட்சம், 10.25 சதம் கரும்பு அடிப்படை மீட்பு விகிதத்தில் இருக்க வேண்டுமென நிபந்தனையும் விதித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் கரும்பு டன்னுக்கு, 4,550, சட்டீஸ்கர் மாநிலத்தில், 4,200, மகாராஷ்டிராவில், 3,750, உத்தரபிரதேசத்தில் 3,520, பீகாரில் 3,490 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், ரூ.3,134 மட்டுமே தற்போது வழங்கப்பட்டு வருகிறது; உற்பத்தி செலவு குறைவாக இருக்கிற மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகள் மிக அதிகமான ஊக்கத்தொகையை கொடுத்து விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது, உற்பத்தி செலவு அதிகமாக இருக்கிற தமிழகத்தில், மாநில அரசு டன்னுக்கு, 4,000 ரூபாய் வழங்கப்படும் என விவசாயிகளுக்கு வாக்குறுதி அளித்துவிட்டு வழங்காமல் உள்ளது. தமிழகத்தில், 40 கரும்பு சர்க்கரை ஆலைகள் உள்ளன. 15 லட்சம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டு வந்தது, தற்போது, 5 லட்சமாக சுருங்கி உள்ளது.
தமிழகத்தில், சராசரி கரும்பு அடிப்படை மீட்பு விகிதம், 9.5 சதமாக உள்ளபோது, மத்திய அரசு அறிவித்திருக்கிற கூடுதல் விலைக்கு, 10.25 சதவீதம் இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்திருப்பதால், மத்திய அரசு அறிவித்திருக்கிற கூடுதல் விலையை இங்குள்ள கரும்பு விவசாயிகள் பெற முடியாது. தமிழக கரும்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.
உற்பத்தி செலவு அதிகமாக இருக்கிற மாநிலங்களுக்கு தகுந்தாற்போல், குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு கூட்டி தர வேண்டுமென, தமிழக விவசாயிகள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கையை ஏற்காமல், இந்தியா முழுவதும் ஒரே விலை நிர்ணயிக்கப்பட்டு இருப்பது, தமிழக விவசாயிகளுக்கு எதிரானதாக உள்ளது. தற்போது கைவிட்டுள்ள நிலையில், மாநில அரசு விவசாயிகளுக்கு கரும்பு டன்னுக்கு, 4,000 ரூபாய் வரும் அளவிற்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.