/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மஞ்சள் விலையை குறைத்ததாக விவசாயிகள் சாலை மறியல்
/
மஞ்சள் விலையை குறைத்ததாக விவசாயிகள் சாலை மறியல்
ADDED : ஆக 08, 2025 01:48 AM
ஆத்துார், ஆத்துார் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், மஞ்சளை கொண்டு வந்தனர். ஆனால் கடந்த வாரத்தை விட, குவிண்டாலுக்கு, 2,000 ரூபாய் விலை குறைத்துள்ளதாக, கூட்டுறவு சங்க அலுவலர்கள், வியாபாரிகளிடம், விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர்.
மேலும் விலை குறைப்பு குறித்து காரணம் தெரிவிக்காததால் இரவு, 9:10 மணிக்கு, வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கம் முன், சேலம் - சென்னை மற்றும் ஆத்துார் - பெரம்பலுார் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் மறியலில் ஈடுபட்டனர். ஆத்துார் டவுன் போலீசார், பேச்சு நடத்தினர். பின், கூட்டுறவு சங்க அலுவலர்களிடம் பேசி, நாளை(இன்று) தீர்வு காண்பதாக தெரிவித்தனர். இதனால் இரவு, 10:00 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.