/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழைநீர் ஓடை மாயம் விவசாயிகள் வேதனை
/
மழைநீர் ஓடை மாயம் விவசாயிகள் வேதனை
ADDED : ஆக 18, 2025 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டி ஊராட்சி ஒண்டியூரில் உள்ள ராஜன் குட்டைக்கு, சேலம் -நாமக்கல் நெடுஞ்சாலையின் கிழக்கு பகுதியில் இருந்து ஓடை வழியே மழைநீர் வந்தடையும். நெடுஞ்-சாலை அடியில், ஓடைக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் சாலையின்
கிழக்கு, மேற்கு பகுதிகளில் இருந்த மழைநீர் ஓடையை மூடி, பாதை, விவசாய நிலமாக மாற்றிவிட்டனர். ஆக்-கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து ஓடையை மீட்க வேண்டும். அதேநேரம், 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட ராஜன்குட்டையை அளவீடு செய்து, பாதுகாப்பு வேலி அமைத்து பராமரிக்க, சமீபத்தில் நடந்த கிராம சபா கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.