ADDED : ஆக 08, 2024 09:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி: குடஞ்சாவடியில், காகாபாளையம் - ஆட்டையாம்பட்டி பிரதான சாலை, கண்டர்குலமா-ணிக்கம், அருந்ததியர் காலனியில் இருந்து வேப்பமரத்தான்காடு, கோணங்கிபாளையம் வழியே, 2 கி.மீ.,க்கு, 2004ல் தார்சாலை அமைக்கப்பட்டது.
அதை சரியாக பராமரிக்காததால், 10 ஆண்டு-களாக ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அதிகாலையில் காளிப்பட்டிக்கு விளைபொருட்களை விற்க, இருசக்கர வாகனங்களில் கொண்டு செல்லும் விவசா-யிகள், அடிக்கடி தடுமாறி விழுந்து காயம் அடைந்து வருகின்-றனர். மேலும் பள்ளி, கல்லுாரி மாணவர்களும் சிரமத்துக்கு ஆளாவதால், மீண்டும் சாலை அமைக்க, அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.