/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாடகை டிராக்டர் கிடைக்காமல் விவசாயிகள் அவதி
/
வாடகை டிராக்டர் கிடைக்காமல் விவசாயிகள் அவதி
ADDED : செப் 22, 2024 05:15 AM
ஆத்துார்: ஆத்துார் அருகே தென்னங்குடிபாளையத்தில் வேளாண் பொறியியல் துறை அலுவலகம் உள்ளது. அங்கு ஆத்துார், கெங்கவல்லி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய தாலுகா விவசாயிகளுக்கு, விவசாய நிலத்தை உழவு செய்வதற்கு டிராக்டர், வாடகைக்கு வழங்கப்படுகிறது.
ஆனால் வாடகை டிராக்டருக்கு முன்பதிவு செய்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால் உரிய காலத்தில் நிலத்தை உழவு செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஆத்துார் வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் கூறுகையில், '4 தாலுகாவுக்கு, 3 டிராக்டர்கள் உள்ளன. முன்பதிவு அடிப்படையில் டிராக்டர் வாடகைக்கு அனுப்பப்படும். ஒரு மணி நேர வாடகை, 500 ரூபாய். இம்மாதத்தில் மற்றொரு டிராக்டர் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளதால் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என்றனர்.