ADDED : அக் 10, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விவசாயிகள் சங்கம்
ஆர்ப்பாட்டம்
ஓமலுார், அக். 10-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மொபைல் போன் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலர், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த செப்., 9 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சேலம் மாவட்டம் ஓமலுாரில் நேற்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். அதில் மாவட்ட செயலர் தங்கவேலு, மொபைல் போன் நிறுவன தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசினார். ஒரு மணி நேரம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.