/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீஸ்காரரின் மனைவியை தாக்கிய தந்தை - மகன் கைது
/
போலீஸ்காரரின் மனைவியை தாக்கிய தந்தை - மகன் கைது
ADDED : டிச 08, 2025 04:43 AM
ஓமலுார்: தொளசம்பட்டி அருகே எம்.என்.பட்டியை சேர்ந்தவர் கொடிய-ரசி, 43. இவரது கணவர் கருணாகரன், 45. தாரமங்கலம் ஸ்டேஷனில், போலீஸ்காரராக பணிபுரிகிறார். இவரது வீடு அருகே அய்யனாரப்பன் கருப்புசாமி கோவில் உள்ளது. அதற்கு கொடியரசியின் மாமனார் கந்தன், தர்மகர்த்தாவாக உள்ளார்.
கடந்த, 5ல் அதே ஊரை சேர்ந்த செந்தில்குமார், அவரது மகன் சதீஷ் ஆகியோர், இருமுடி பையை கோவிலில் வைக்க வேண்டும் என கூறி, கொடியரசியிடம், கோவில் சாவி கேட்டனர். அதற்கு பொது கோவிலில் தனி நபர் பொருட்களை வைக்க அனுமதி கிடையாது என கூறினார்.இதில் வாக்குவாதம் ஏற்பட்டு, அக்கம் பக்கத்தினர் சமாதானப்ப-டுத்தி அனுப்பினர். தொடர்ந்து அன்றே கொடியரசியை, தந்தை, மகன், தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து கொடியரசி புகார்படி, தொளசம்பட்டி போலீசார் விசா-ரித்து, பெண் கொடுமை உள்பட, 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து, நேற்று செந்தில்குமார், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.

