ADDED : டிச 08, 2025 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: இடைப்பாடி, வெள்ளாண்டிவலசில் உள்ள ஓம்சக்தி காளி-யம்மன், நடராஜர், முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா யாகசாலைக்கு, கடந்த மாதம், 25ல் கால்கோள் நடப்பட்டது.
இந்நிலையில் காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர், நேற்று கோபுர கலசங்கள் மீது ஊற்றி கும்பாபிேஷகம் நடத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த புனிதநீர், கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின் ஏராளமான பக்தர்கள் வழி-பட்டனர்.

