/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு: வாலிபருக்கு காப்பு
/
தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு: வாலிபருக்கு காப்பு
தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு: வாலிபருக்கு காப்பு
தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு: வாலிபருக்கு காப்பு
ADDED : ஜூலை 17, 2025 02:40 AM
கரூர், வெள்ளியணை அருகே, தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை செல்லாண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 58; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், 30, என்பவருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு வரி வசூல் செய்வது தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த, 13ல் 'குடி'போதையில் இருந்த ராமச்சந்திரன், முருகேசன் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது, தட்டிக்கேட்ட முருகேசன், அவரது மகன் ஜெயப்பிரகாஷ், 28, ஆகிய இரண்டு பேரை, ராமச்சந்திரன் அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்து, ஜெயப்பிரகாஷ் கொடுத்த புகார்படி, நேற்று வெள்ளியணை போலீசார் ராமச்சந்திரனை கைது செய்தனர்.