/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடும்ப தகராறில்மாமனார், மருமகன் கைது
/
குடும்ப தகராறில்மாமனார், மருமகன் கைது
ADDED : ஏப் 26, 2025 01:51 AM
பாப்பிரெட்டிப்பட்டி:-கடத்துார் அடுத்த மணியம்பாடியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் துளசியம்மாள், 25. இவருக்கும், புட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்த சிவக்குமார், 35, என்பவருக்கும், 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதனிடையே, தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த, ஆறு மாதங்களாக கணவனை விட்டு துளசியம்மாள் பிரிந்து தாய் வீட்டில் வசிக்கிறார்.
இதனிடையே குடும்பம் நடத்த, துளசியம்மாளை அழைக்க சிவக்குமார் நேற்று முன்தினம் மணியம்பாடி சென்றார். அப்போது மாமனார் செல்வத்துக்கும், சிவக்குமாருக்கும் தகராறு ஏற்பட்டது. இருவரும் தாக்கி கொண்டனர். இருவர் கொடுத்த புகாரின்படி, கடத்துார் போலீசார் வழக்கு பதிந்து சிவக்குமார், செல்வம் ஆகியோரை கைது செய்தனர்.
இளம் பெண் மாயம்
பாப்பிரெட்டிப்பட்டி:-பொம்மிடி அடுத்த மோட்டாங்குறிச்சியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 40, கூலி தொழிலாளி. இவருக்கும், தர்மபுரி அடுத்த பனந்தோப்பு பகுதியை சேர்ந்த கீதா, 28, ஆகியோருக்கும், 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரு மகள்கள் உள்ளனர்.
கடந்த, 22ல் வழக்கம் போல் ஜெயபிரகாஷ் வேலைக்கு சென்றார். பின் மாலை வீட்டுக்கு வந்தபோது, கீதா இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் படி பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.

