/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த மகன் அபாய சங்கிலியால் ரயிலை நிறுத்திய தந்தை

ADDED : ஏப் 25, 2025 01:34 AM
சேலம்:
பீகாரை சேர்ந்தவர் அருண்குமார், 50. சென்னையில் உள்ள ஜவுளி கடையில் பணிபுரிகிறார். இவரது மகன் நித்தீஷ், 22. சேலம், செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பேக்கரியில் பணிபுரிகிறார். இவர்கள் சேலத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு சேலம் - சென்னை ரயிலில் முன்பதிவற்ற பெட்டியில் பயணித்தனர்.
அயோத்தியாப்பட்டணம் - மின்னாம்பள்ளி ஸ்டேஷன்கள் இடையே ரயில் சென்றபோது, படிக்கட்டில் அமர்ந்திருந்த நித்தீஷ் தவறி கீழே விழுந்தார். அதிர்ச்சி அடைந்த அருண்குமார், உடனே அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். தொடர்ந்து இறங்கி சென்று தேடியபோது, தண்டவாளத்தை ஒட்டிய இடத்தில் தலையில் அடிபட்டிருந்த நிதிைஷ மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
இச்சம்பவத்தால் ரயில், 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டது. சேலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.