/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீட்டுக்கான மானியம் கிடைக்கல 2 மகளுடன் தந்தை தீக்குளிக்க முயற்சி
/
வீட்டுக்கான மானியம் கிடைக்கல 2 மகளுடன் தந்தை தீக்குளிக்க முயற்சி
வீட்டுக்கான மானியம் கிடைக்கல 2 மகளுடன் தந்தை தீக்குளிக்க முயற்சி
வீட்டுக்கான மானியம் கிடைக்கல 2 மகளுடன் தந்தை தீக்குளிக்க முயற்சி
ADDED : அக் 01, 2024 07:19 AM
சேலம்: வீட்டுக்கான மானியம் கிடைக்காததால், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீக்குளிக்க முயன்றனர்.
சேலம் அயோத்தியாபட்டணம் அடுத்த, மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த தறி தொழிலாளி ஆனந்தன், 54. இவர், தன் இரு மகள்க-ளுடன் நேற்று மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது, திடீரென மூவரும் தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து மீட்-டனர்.
மனுவில் ஆனந்தன் கூறியிருப்பதாவது: பாரத பிரதமரின் நகர்புற குடிசை மாற்று திட்டத்தின் கீழ், வீடுகட்ட எனக்கு அனுமதி கிடைத்தது. எனவே, என்னுடைய பழைய வீட்டை இடித்து விட்டு, அக்கம்பக்கத்தினரிடம் கடன் பெற்று, வீடு கட்டினேன். அதன்பின் அனுமதி அளித்த, சேலம் கோட்ட பொறியாளர் அலு-வலகத்தில் வீட்டுக்கான மானியத்தொகை கேட்டு விண்ணப்-பித்தேன். என்னிடம், ஆவணத்தில் கையெழுத்து பெற்று கொண்ட அதிகாரிகள், தகவல் தெரிவிப்பதாக கூறி அனுப்பிவிட்-டனர். அதன்பின், மொபைலில் தொடர்பு கொண்டு, உன்னுடைய வீட்டுக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லையென கூறிவிட்டு, இணைப்பை துண்டித்து விட்டனர். இது தொடர்பாக, ஆறு ஆண்-டுகளாக மனு கொடுத்து முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மூவரையும் விசாரணைக்கு அழைத்து சென்ற சேலம் டவுன் போலீசார், ஆனந்தன் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், சிகிச்சைக்-காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.