தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நடைப்பயிற்சிக்கு கட்டணம்: மா.கம்யூ., கண்டனம்

நடைப்பயிற்சிக்கு கட்டணம்: மா.கம்யூ., கண்டனம்

நடைப்பயிற்சிக்கு கட்டணம்: மா.கம்யூ., கண்டனம்


ADDED : ஜூலை 10, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 05:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்:சேலம் மாநகராட்சி பள்ளப்பட்டி ஏரி பூங்காவில் தினமும் ஏராளமானோர், நடைப்பயிற்சி மேற்கொண்டனர். அவர்களிடம் சில நாட்களாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை கண்டித்து, பள்ளப்பட்டி ஏரி பூங்கா முன், மா.கம்யூ., சேலம் மாநகர செயலர் பிரவீன் தலைமையில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பேசுகையில், ''மாநகராட்சி நிர்வாகம், குத்தகை எடுத்த தனியார் நிறுவனத்துக்கு, நடைப்பயிற்சிக்கு செல்பவர்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டாம் என, நிலையான உத்தரவை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது,'' என்றார். மாவட்ட குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள், சுற்றுவட்டார மக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us