தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/பால் விலை உயர்த்த 22ல் ஆர்ப்பாட்டம்

பால் விலை உயர்த்த 22ல் ஆர்ப்பாட்டம்

பால் விலை உயர்த்த 22ல் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 10, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:தமிழ்நாடு விவசாயிகள் சங்க, சேலம் மாவட்ட தலைவர் பெரியண்ணன், சேலத்தில் அளித்த பேட்டி:

முதல்வர் விஜய் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, விவசாயிகள் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தனியார் பால் நிறுவனங்கள் விற்பனை விலையை உயர்த்திவிட்டன. விரைவில் கொள்முதல் விலையையும் உயர்த்தி தருவார்கள். அதனால் தீவன விலை ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு இடையே பால் உற்பத்தி செய்து, ஆவின் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்கும், கறவை மாடு வளர்ப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, பால் கொள்முதல் விலையை, தனியாருக்கு இணையாக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தி, தமிழகத்துக்குரிய தண்ணீரை பெற்று தரத்வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 22ல் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us