sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அறக்கட்டளை மோசடி வழக்கில் பெண் நிர்வாகி உதவியாளர் கைது

/

அறக்கட்டளை மோசடி வழக்கில் பெண் நிர்வாகி உதவியாளர் கைது

அறக்கட்டளை மோசடி வழக்கில் பெண் நிர்வாகி உதவியாளர் கைது

அறக்கட்டளை மோசடி வழக்கில் பெண் நிர்வாகி உதவியாளர் கைது


ADDED : ஜன 27, 2025 03:17 AM

Google News

ADDED : ஜன 27, 2025 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ----சேலத்தில் அறக்கட்டளை மோசடி வழக்கில், பெண் நிர்வா-கியின் உதவியாளரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலுாரை சேர்ந்தவர் விஜயபானு, 48; சேலம், அம்மாபேட்-டையில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளையை நடத்தினார். பல்வேறு கவர்ச்சி அறிவிப்பை வெளியிட்டு மக்க-ளிடம் முதலீடு பெற்றனர். இதுதொடர்பாக பொருளாதார குற்றப்-பிரிவு போலீசார், அறக்கட்டளையில் சோதனை செய்து, 12.65 கோடி ரூபாய், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளியை பறி-முதல் செய்தனர். முன்னதாக அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயபானு, ஜெயபி-ரதா, பாஸ்கரை கைது செய்தனர். பணத்தை இழந்த மக்கள், அம்-மாபேட்டை போலீசில் புகார் அளித்து வருகின்றனர். இந்நி-லையில் விஜயபானுக்கு உதவியாளராக செயல்பட்ட, அறக்கட்-டளை நிர்வாகியான வேலுார் மாவட்டம் அலமேலு மங்காபு-ரத்தை சேர்ந்த சையத் முகமது, 44, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் ஒரு வேன் பறிமுதல் செய்யப்பட்-டது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:அறக்கட்டளையை சேர்ந்த-வர்கள், பல்வேறு இடங்களில் அலுவலகத்தை வைத்து, இரட்-டிப்பு பணம் தருவதாக கோடிக்கணக்கில் வசூலித்துள்ளனர். இதை நம்பிய பலர், நகை, விவசாய நிலம் உள்ளிட்டவற்றை அடமானமாக வைத்து லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இப்படி, 500 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டிருக்-கலாம் என தெரிய வருகிறது.இதற்கு பணியாற்றியவர்கள், ஏஜன்-டுகள் என, 12 பேரிடம் விசாரணை நடக்கிறது. விஜயபானு, சையத் முகமது ஆகியோர், ஆந்திராவில் ஒரு பண மோசடி வழக்கில் சிக்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது. கைதானவர்களுக்கு சேலம், வேலுார், கடலுாரில் உள்ள பல்வேறு வங்கிகளில் கணக்-குகள் உள்ளன. அவற்றில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அறிய, சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். வேறெங்கும் சொத்து வாங்கியுள்ளனரா எனவும் விசாரிக்கிறோம். நிர்வாகிகள் மீது போலீசில் புகார் தர வேண்டாமென்று, பாதிக்கப்-பட்ட மக்களிடம் ஏஜன்டுகள் வலியுறுத்தி வருவதாக தகவல் வரு-கிறது. இதனால், 20க்கும் மேற்பட்டோரை கண்காணித்து வரு-கிறோம். அவர்களிடமும் விசாரணை நடக்கும்.

இவ்வாறு போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us