/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயில்களில் சேலம் வந்த உரம், சிமென்ட் மூட்டைகள்
/
ரயில்களில் சேலம் வந்த உரம், சிமென்ட் மூட்டைகள்
ADDED : ஏப் 20, 2025 01:42 AM
சேலம்:
சேலம், செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட் ரயில்வே ஸ்டேஷனுக்கு, தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், விவசாயத்துக்கு தேவையான உரங்கள், கட்டுமானத்துக்கு தேவையான சிமென்ட் மூட்டைகள் ரயில்களில் வருவது வழக்கம். அதன்படி நேற்று, காரைக்கால் துறைமுகத்தில் இருந்து,
1,300 டன் யுரியா, பொட்டாஷ், டி.ஏ.பி., உர மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. அதேபோல், துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து, 1,300 டன் யுரியா, பொட்டாஷ், டி.ஏ.பி., உரங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றை சுமை துாக்கும் தொழிலாளர்கள், லாரிகளில் ஏற்றி சேலம் சுற்றுவட்டாரங்களில் உள்ள தனியார் குடோன்களுக்கு அனுப்பினர். அதேபோல் ஆந்திரா மாநிலத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம், 1,300 டன் சிமென்ட் மூட்டைகளும் கொண்டு வரப்பட்டன.

