/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கம்பம் நடுதலுடன் திருவிழா தொடக்கம்
/
கம்பம் நடுதலுடன் திருவிழா தொடக்கம்
ADDED : மார் 21, 2024 02:03 AM
வீரபாண்டி, வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கம்பம் நடுதலுடன் நேற்று தொடங்கியது. இதற்கு தேர்வு செய்யப்பட்ட மரத்துக்கு பூஜை செய்து நடுப்பாகத்தை வெட்டி செதுக்கி சீர் செய்து, மஞ்சள், குங்குமம், சந்தனம் தடவி மலர் மாலைகளால் அலங்கரித்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் கருவறை முன் நடப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவிழாவையொட்டி, பல்வேறு குழுக்கள், சமூகம் சார்பில் தினமும் இரவு உற்சவர் அம்மன் விதவித அலங்காரங்களில் மின் விளக்குகளால் அலங்கரித்த சப்பரங்களில் வீதிஉலா வருவர். ஏப்., 1ல், 'முத்து எடுத்தல்' நிகழ்ச்சி, 2ல் பூச்சாட்டுதல், 3ல் பால்குட ஊர்வலம், 4ல் பொங்கல் வைத்தல், அக்னி கரகம், அலகு குத்துதல், 5ல் மஞ்சள் நீராட்டு வைபவம், கம்பம் எடுத்தலுடன் திருவிழா நிறைவு பெறும்.

