/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.1.20 கோடி ஒதுக்கீடால் ஜன., 2ல் இறுதி கூட்டம்
/
ரூ.1.20 கோடி ஒதுக்கீடால் ஜன., 2ல் இறுதி கூட்டம்
ADDED : டிச 26, 2024 02:35 AM
பனமரத்துப்பட்டி: கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று, 1.20 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியதால், இந்த ஐந்தாண்டின் இறுதி கூட்டம், ஜன., 2ல் நடக்க உள்ளது.
பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், 13 கவுன்சிலர்கள் உள்ளனர். ஒன்-றியக்குழு தலைவராக, அ.தி.மு.க.,வை சேர்ந்த ஜெகநாதன் உள்ளார். துணை தலைவராக, தி.மு.க.,வை சேர்ந்த சங்கர் உள்ளார். கடந்த செப்டம்பரில் நடந்த ஒன்றிய கூட்டத்தில், 13 கவுன்சிலர்களும், அவரவர் வார்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பட்டியலை வழங்கி, 1.70 கோடி ரூபாயில், 15 பணிகள் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றினர். அதற்கு நிதி இல்லை என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவிக்க, திட்டப்பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் இந்த ஐந்தாண்டின் பதவி காலம், 2025 ஜன., 5ல் முடியும் நிலையில், நிதியின்றி இறுதி கூட்டம் நடத்துவதை கவுன்சிலர்கள் ஒத்திவைத்தனர்.
இதையடுத்து தலைவர் ஜெகநாதன், தி.மு.க.,வை சேர்ந்த, கவுன்-சிலர் சுரேஷ்குமார் தனித்தனியே சென்று, கலெக்டர் பிருந்தாதே-வியை சந்தித்து நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்தனர். ஒன்றிய கமி-ஷனர் கார்த்திகேயனும் முயற்சி செய்தார்.
இந்நிலையில் நிலுவையில் இருந்த, 1.20 கோடி ரூபாய் நிதி, பன-மரத்துப்பட்டி ஒன்றியத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கவுன்சிலர்கள் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து, இந்த ஐந்தாண்டின் இறுதி கூட்டத்தை, ஜன., 2ல் நடத்துவதற்கான ஏற்-பாடுகளை, அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.