/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற இறுதி எச்சரிக்கை
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற இறுதி எச்சரிக்கை
ADDED : நவ 19, 2024 01:37 AM
ஆக்கிரமிப்புகளை அகற்ற இறுதி எச்சரிக்கை
மகுடஞ்சாவடி, நவ. 19-
சித்தர்கோவில் பகுதியில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம்--இளம்பிள்ளை பிரதான சாலை, சித்தர் கோவில் பஸ் ஸ்டாப் அருகே, பிரசித்தி பெற்ற கஞ்சமலை சித்தேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய வருவர். சித்தர் கோவில் அடிவார பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அதிகளவில்
ஏற்பட்டது. இதுகுறித்து, நெடுஞ்சாலை துறைக்கு புகார் சென்றதால், கடந்த சில மாதங்களாக சித்தர் கோவில்-- இளம்பிள்ளை பிரதான சாலை மற்றும் சித்தர் கோவில்- மாட்டையம்பட்டி சாலை ஆகியவற்றில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள், கடைகளை கட்டியுள்ள நபர்களுக்கு ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்து கடந்த அக்.,14ல் இறுதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், யாரும் இதுவரை ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. எனவே, நேற்று சித்தர் கோவில் பகுதிக்கு வந்த நெடுஞ்சாலை துறையினர், ஆக்கிரமிப்பாளர்களிடம் ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்து கூறிச் சென்றனர். மேலும், 'முழு அளவில் ஆக்கிரமிப்பை தாங்களாகவே அகற்றாத பட்சத்தில், நவ.,21ல் போலீசார் துணையுடன் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்றப்படும்' என கூறி விட்டு சென்றனர் .