/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போக்குவரத்து பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி
/
போக்குவரத்து பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி
போக்குவரத்து பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி
போக்குவரத்து பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி
ADDED : ஜன 07, 2024 10:32 AM
சேலம்: சேலம் மண்டல அரசு போக்குவரத்துக்கழகத்தில், பணி காலத்தில் டிரைவர்கள் ராஜா, 46, மோகன், 58, பயணச்சீட்டு பரிசோதகர் வெங்கடாசலம், 53, ஆகியோர் கடந்த டிசம்பரில் அடுத்தடுத்து இயற்கை மரணம் அடைந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு, சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள மண்டல தலைமை அலுவலகத்தில் நேற்று நிதியுதவி வழங்கப்பட்டது.
நிர்வாக இயக்குனர் பொன்முடி, தலா, 5 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கினார். அதை இறந்த மனைவியர் முறையே வெண்ணிலா, சாந்தி, பழனியம்மாள் ஆகியோர், தனித்தனியே பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து ஓய்வு பெற்ற பணியாளர், 6 பேருக்கு தலா, 35,000 ரூபாய் காசோலையை வழங்கினார். அதை ஓய்வு பெற்ற டிரைவர்களான சவுந்தரராஜன், பெரியசாமி, செல்வம், தண்டிவேல், கண்டக்டர் கோவிந்தசாமி, தொழில்நுட்ப பணியாளர் கந்தசாமி ஆகியோர் முறையே பெற்றுக்கொண்டனர். தொழிலாளர்கள் உதவும் கரங்கள் நிதியில் இருந்து, முதல் முறை இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.