/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அடகு நகைகளை தர மறுத்து மிரட்டிய 'பைனான்சியர்' கைது
/
அடகு நகைகளை தர மறுத்து மிரட்டிய 'பைனான்சியர்' கைது
அடகு நகைகளை தர மறுத்து மிரட்டிய 'பைனான்சியர்' கைது
அடகு நகைகளை தர மறுத்து மிரட்டிய 'பைனான்சியர்' கைது
ADDED : டிச 08, 2025 04:11 AM
மேட்டூர்: அடகு நகைகளை தர மறுத்து, பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த பைனான்சியரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டூர், சேலம் கேம்ப், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்-வாம்பிகை, 56. இவர், 2019ல் மேட்டூர் தனியார் வங்கியில் நகை-களை அடகு வைத்து பணம் வாங்கி, வீடு கட்டும் பணியில் ஈடு-பட்டார்.மேலும் பணம் தேவைப்பட, தோழி சர்மிளா ஆலோசனைப்-படி, மேட்டூர், கூலிலைனை சேர்ந்த, 'பைனான்சியர்' சந்தோஷ்-குமார், 30, என்பவரிடம், 108 கிராம் நகைகளை அடகு வைத்து, 7.50 லட்சம் ரூபாய் பெற்றார். இவரது தங்கை தேன்மொழியும், ஒரு பவுன் சங்கிலியை, சந்தோஷ்குமாரிடம் அடமானம் வைத்து, 2.30 லட்சம் ரூபாய் பெற்றார்.
செல்வாம்பிகை மீண்டும், கடந்த ஏப்ரலில், 315 கிராம் நகை-களை, சந்தோஷ்குமாரிடம் அடமானம் வைத்து, 22.76 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.
அந்த நகைகளுக்கு வட்டியாக மாதம், 47,000 ரூபாய் கொடுக்க வேண்டும். செல்வாம்பிகை, மே, ஜூலையில், 7,400 ரூபாய் மட்டும் கொடுத்ததாக தெரிகிறது. ஜூலை, 14ல், தேன்மொழி, 2.35 லட்சம் ரூபாயை கொடுத்து, சந்தோஷ்குமாரிடம் நகையை கேட்டுள்ளார். அவர் தராமல் இழுத்தடித்தார்.
இந்நிலையில் அம்பேத்கர் நகரை சேர்ந்த மீனாட்சி அடமானம் வைத்த, 6 பவுன் நகையை மீட்கவும், செல்வாம்பிகை, அவரது நகையை மீட்கவும், சந்தோஷ்குமார் வீட்டுக்கு சென்றனர்.
அப்போது சந்தோஷ்குமார், 'கொடுத்த நகை, வட்டிக்கே சரியாக போய்விட்டது' என, செல்வாம்பிகையிடம் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, சந்தோஷ்குமார் இரும்பு கம்-பியை எடுத்து காட்டி, செல்வாம்பிகைக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அவர் புகார்படி மேட்டூர் போலீசார் விசா-ரித்து, நேற்று சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.
தீக்குளிக்க முயற்சி
இதுதொடர்பான விசாரணைக்கு நேற்று மதியம், 1:45 மணிக்கு, மேட்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த சந்தோஷ்-குமார், மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்ய முயன்றார். போலீசார் தடுத்து, மண்ணெண்ணெய் கேனை பறி-முதல் செய்தனர். இதுதொடர்பாக ஏட்டு செல்வராஜ் புகார்படி, மேட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

