/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுநீர் கழிக்க சென்ற 'கேப்'பில் மொபட்டை திருடியவர் கைது
/
சிறுநீர் கழிக்க சென்ற 'கேப்'பில் மொபட்டை திருடியவர் கைது
சிறுநீர் கழிக்க சென்ற 'கேப்'பில் மொபட்டை திருடியவர் கைது
சிறுநீர் கழிக்க சென்ற 'கேப்'பில் மொபட்டை திருடியவர் கைது
ADDED : டிச 08, 2025 04:11 AM
சேலம்: சேலம், ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 31. தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்துகொண்டி-ருந்தார்.
வழியில் போடிநாயக்கன்பட்டி ஏரி ஓரம், அவரது, 'டெஸ்-டினி' மொபட்டை சாவியுடன் நிறுத்திவிட்டு, புதர் மறைவில் சிறுநீர் கழிக்க சென்றார்.திரும்பி வந்தபோது மொபட்டை காணவில்லை. அவர் புகார்-படி, சூரமங்கலம் போலீசார், கேமரா உதவியுடன் விசாரித்ததில், மொபட்டை திருடியது, பழைய சூரமங்கலம், வெள்ளைய கவுண்டர் வீதியை சேர்ந்த, சரித்திர பதிவேடு குற்றவாளி முருகன், 24, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மொபட்டை மீட்டனர்.
போலீசில் காதல் ஜோடி தஞ்சம்
வாழப்பாடி, டிச. 8-
வாழப்பாடி, சந்திரபிள்ளைவலசை சேர்ந்த, சக்திவேல் மகன் கார்த்திக், 26. 'போர்வெல்' ஆப்பரேட்டர். ரங்கனுாரை சேர்ந்த, ஆறுமுகம் மகள் கிருத்திகா, 20. பி.எஸ்சி., முடித்துள்ளார். இரு-வரும், 'இன்ஸ்டாகிராம்' மூலம் காதலித்தனர். கடந்த, 5ல், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு, நேற்று, வாழப்பாடி போலீசில் தஞ்சம் அடைந்தனர். இரு வீட்டினரை அழைத்து போலீசார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

