ADDED : நவ 12, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி, நவ. 12-
வாழப்பாடி அடுத்த, சேசன்சாவடி பகுதியில் வெள்ளாளகுண்டம் பிரிவு ரோடு அருகே உள்ள தனியார் நூற்பாலையில், நேற்று மதியம் 12:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. வாழப்பாடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, புகைந்து கொண்டிருந்த பஞ்சுகள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதில், 50 கிலோ வரையிலான பயன்படாத பஞ்சுகள் மட்டுமே சேதம் அடைந்ததாக, தனியார் நூற்பாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தீ பற்றியதை சுதாரித்துக் கொண்டு உடனே தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

