/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அம்மாபாளையம் ஏரியில் தீ கருகிய செடி, கொடிகள்
/
அம்மாபாளையம் ஏரியில் தீ கருகிய செடி, கொடிகள்
ADDED : பிப் 17, 2025 02:19 AM
பனமரத்துப்பட்டி: மல்லுார் அருகே, 100 ஏக்கரில், அம்மாபாளையம் ஏரி உள்ளது. ஆனால், 15 ஆண்டாக வறண்ட ஏரியில் சீமைக்கருவேல, புளிய மரங்கள் வளர்ந்துள்ளன.
இந்நிலையில் நேற்று மதியம், 1:30 மணிக்கு, ஏரி சாலையோ-ரத்தில் கொட்டி கிடந்த குப்பையில் தீப்பற்றியது. தொடர்ந்து காய்ந்து கிடந்த புற்கள், செடி, கொடிகள் மூலம் ஏரிக்குள் தீ பர-வியது. தகவல் அறிந்து வந்து, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடு-பட்டனர். 10 ஏக்கருக்கு தீப்பற்றி இருந்ததால், வாகனத்தில் இருந்த தண்ணீர் தீர்ந்தது. பின், மீண்டும் நிரப்பி வந்து, தொடர்ந்து பணியில் ஈடுபட்டனர். ஒருவழியாக மாலை, 5:15 மணிக்கு தீயை அணைத்தனர். ஆனால் ஏராளமான செடி, கொடிகள் கருகின.

