/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டறையில் தீ: 5 டூவீலர்கள் எரிந்து நாசம்
/
பட்டறையில் தீ: 5 டூவீலர்கள் எரிந்து நாசம்
ADDED : ஆக 24, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன். மாசி
நாயக்கன்பட்டியில் இருசக்கர வாகன மெக்கானிக் பட்டறை வைத்து தொழில் செய்கிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டிச்சென்றார். நேற்று காலை வந்து பட்டறையை திறந்தபோது கரும்புகை வெளியேறியது. அதிர்ச்சியடைந்த ஸ்ரீதரன், உடனே செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், 5 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா என, அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.