/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடம் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து
/
குடம் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து
ADDED : ஜூலை 11, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், பைத்துார் சாலையை சேர்ந்தவர் மணிகண்டன், 40. அதே பகுதியில், பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளார். அங்கு பிளாஸ்டிக், பழைய பிளாஸ்டிக் பொருட்களை தனித்தனியே வைத்திருந்தார். நேற்று காலை, 6:50 மணிக்கு, ஆலையில் தீப்பற்றி எரிந்தது.
மக்கள் தகவல்படி, ஆத்துார் தீயணைப்பு துறையினர், 7:30 மணிக்கு வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். பழைய பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா என, ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.