/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லாரி புக்கிங் ஆபீசில் தீ சேர், டேபிள் நாசம்
/
லாரி புக்கிங் ஆபீசில் தீ சேர், டேபிள் நாசம்
ADDED : மே 02, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:
சேலம், லீபஜார், சூரமங்கலம் பிரதான சாலையில் செந்தில்குமரன் என்பவர், லாரி புக்கிங் அலுவலகம் நடத்தினார். நேற்று காலை, 11:30 மணிக்கு, அலுவலகத்தை பூட்டி, வீட்டுக்கு சென்றார்.
சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிந்தது. மக்கள் தகவல்படி, சூரமங்கலம் தீயணைப்பு துறையினர், இரு வாகனங்களில் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து, அருகே உள்ள மற்ற அலுவலகங்களுக்கு தீ பரவாமல் தடுத்தனர். ஒரு மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் அலுவலகத்தில் இருந்த சேர், டேபிள் உள்ளிட்ட அறைகலன்கள் எரிந்து சாம்பலாகின.