ADDED : ஜூலை 09, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல், தலைவாசல், சிறுவாச்சூர், அன்பு நகரை சேர்ந்தவர் கலைச்செல்வன், 40. அதே பகுதியில், கயிறு தொழிற்சாலை நடத்துகிறார். நேற்று மதியம், 3:00 மணிக்கு, தேங்காய் நார்
கழிவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல்படி, ஆத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள், 3:40 மணிக்கு அங்கு சென்று மேலும் தீ பரவாமல் அணைத்தனர். யாரேனும் தீ வைத்தனரா என, தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்