ADDED : ஆக 26, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், புற்களுக்கு வைத்த தீ, பாக்கு தோப்புக்குள் சென்றதால் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.
ஆத்துார் அருகே, அப்பமசமுத்திரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 50. இவர் பாக்கு சாகுபடி செய்துள்ளார். நேற்று மாலை, 4:00 மணியளவில் தோப்பு அருகில் காய்ந்த புற்களுக்கு, ராமச்சந்திரன் தீ வைத்துள்ளார். அப்போது தோட்டத்தினுள் தீ பரவி, பாக்கு பயிர்களும் தீயில் எரியத்துவங்கியது. ஆத்துார் தீயணைப்பு வீரர்கள் சென்றபோது, வாகனம் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து, வாழை இலை உள்ளிட்ட இலைகளில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், தோட்டத்தில் இருந்த தண்ணீர், இலைகளை பயன்படுத்தி தீயை அணைத்ததால், நான்கு ஏக்கர் பாக்கு தோப்பு தீ விபத்தில் இருந்து தப்பியது