ADDED : செப் 04, 2026 05:09 AM
அ நிறம் | அளவு
வாழப்பாடி; வாழப்பாடி, சின்னகவுண்டாபுரத்தில், சரவணன், 55, என்பவருக்கு சொந்தமான நுாற்பாலை உள்-ளது.
அங்கு கழிவு பஞ்சு தீப்பற்றிய எரிவதாக, வாழப்பாடி தீயணைப்புத்துறையினருக்கு, நேற்று மாலை, 4:00 மணிக்கு தகவல் கிடைத்தது. அங்கு, 20 நிமிடத்தில் சென்ற தீயணைப்பு வீரர்கள், தண்-ணீரை பீய்ச்சி அடித்து, ஒரு மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், 10,000 ரூபாய் மதிப்பில் கழிவு பஞ்சு எரிந்து நாசமாகின. காரிப்பட்டி போலீசார் விசாரித்தனர். அதில் அதிக வெப்பத்தால் தீ விபத்து ஏற்பட்டது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
