/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கரையானை அழிக்க பெட்ரோல் ஊற்றியதில் தீ: மகனும் உயிரிழப்பு
/
கரையானை அழிக்க பெட்ரோல் ஊற்றியதில் தீ: மகனும் உயிரிழப்பு
கரையானை அழிக்க பெட்ரோல் ஊற்றியதில் தீ: மகனும் உயிரிழப்பு
கரையானை அழிக்க பெட்ரோல் ஊற்றியதில் தீ: மகனும் உயிரிழப்பு
ADDED : அக் 03, 2025 02:01 AM
கெங்கவல்லி, கெங்கவல்லி, நடுவலுாரை சேர்ந்த விவசாயி ராமசாமி, 47. இவருக்கு மனைவி மாலதி, 42, இரு பெண், ஒரு ஆண் என, 3 குழந்தைகள். கடந்த செப்., 26 இரவு, 8:00 மணிக்கு பூஜை அறை கதவுகளில் இருந்த கரையானை அழிக்க, பழைய ஆயில் என, நினைத்து, பெட்ரோலை ஊற்றி தெளித்து விட்டார்.
அப்போது மகன் பிரதீஷ், 11, விளக்கேற்ற தீப்பிடித்து எரிந்தது. இதில் ராமசாமி, பிரதீஷ், தீயில் சிக்கி படுகாயமடைந்தனர். மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமசாமி, 28ல் உயிரிழந்தார். தொடர்ந்து பிரதீஷூம் நேற்று உயிரிழந்தார். இவர், தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தார். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.